பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பின் உலகலாவிய தலைவர் ஜெயகாந்தி அவர்கள் மாநில அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் பார்க்கவன் மதிப்பிற்குரிய பன்னீர் செல்வம் அவர்களை கௌரவ படுத்தும் விதமாகவும் , அவர் மாணவர்களுக்கு ஆற்றும் சேவையை பாராட்டியும் ஒரு மடி கணிணியை பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பின் சார்பாக வழங்கினார்.
இந்த மடிகணிணியை அவர் சார்பாக புதுக்கோட்டை அத்தியாயத்தின் பொருப்பாளர் மதிப்பிற்குரிய பார்க்கவன் சுந்தர வடிவேலு அவர்கள் பெற்று கொண்டார்.
பல மாணவர்களின் திறன்களை மேம்படுத்த இந்த மடிகணிணி பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிட தக்கது.
இந்நிகழ்வில் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் சுத்தாங்காத்து, பெரம்பலூர் அத்தியாய தலைவர் தமிழரசன், கடலூர் அத்தியாய பொறுப்பாளர் வீரா ஆகியோர் கலந்து கொண்டனர்..