Parkavan Forum

Support : +91 98844 29991

திரு.புகழேந்தி

இளம் வயதிலிருந்தே நமது பார்க்கவகுல சமுதாயத்திற்க்காக உழைத்த ஒரு பார்க்கவன் பற்றிய பதிவு….

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், தொழுதூர் அருகில் உள்ள மேலகல்பூண்டியை சேர்ந்த திரு.வீரமுத்து உடையார் அவர்களின்பேரன் , திரு.குணசேகரன் உடையார், திருமதி.செல்வி அவர்களின் முதல்மகன் திரு.புகழேந்திபற்றிய பதிவு இது. இவர் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை கீழகல்பூண்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். உயர்நிலைகல்வியை தொழுதூர் உயர்நிலைபள்ளியில் பயின்றார். சிதம்பரம்அண்ணாமலைபல்கலைக்கழகத்தில் B.B.A பயின்றார்.

இவருக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகின்றன. இவரது மனைவி பெயர் கார்த்திகாலட்சுமி .அவர்  B.E. படித்துள்ளார்.இப்பொழுது இல்லத்தரசியாக உள்ளார்.2 வயதுள்ள ஒருமகள் உள்ளார் -பெயர்இனியா.

இவருக்கு ஒருசகோதரர் உள்ளார்.அவரது பெயர் திரு.பூபதி.அவர் AXIOM TELECOM-UAE யில்பணிபுரிகிறார். திருமணமாகி 2 வருடங்கள் ஆகின்றன. அவரது மனைவி பெயர் சுபசந்திரிக்கா, மகள்பெயர்ஷிவானி . 

திரு.புகழேந்தி அவர்கள் அமீரகத்தில் 8 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிகிறார். முதல் 3 ஆண்டுகள்  GULF NEWS யில்பணிபுரிந்தார். பின்னர், அவர்  2ஆண்டுகள்  ZOMATO வில்பணிபுரிந்தார். கடந்த 3 ஆண்டுகளாக EMIRATES POST யில் பணிபுரிகிறார்.

மேலும் இவர் 9 ஆண்டுகாலமாக இந்திய ஜனநாயக கட்சியில்(IJK) அயராது பாடுபட்டார். ஒரு தீவிர தொண்டனாக ,கட்சியின் அனைத்து பொதுகூட்டங்களிளும் களந்து கொண்டுள்ளார். இவரது  9 ஆண்டுகால உழைப்பை அறிந்துகொண்டு டாக்டர் பாரிவேந்தர் , இவருக்கு மாநிலஇளைஞர் அணிதுணைசெயலாளராக நியமித்துள்ளார்.

மேலும், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் முசிறிதொகுதி பொறுப்பாளராக பொறுப்பேற்றார்.

தஞ்சை இராஜராஜசோழன் சதயவிழாவில்மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் 15 நபர்கொண்ட குழுவில் இவரும் ஒருவர்.

இவர்வருடம் 3நபரின் கல்விக்கு உதவியுள்ளார். சிலகாரணங்களால் திருமணத்திற்கு பிறகு அதை தொடர முடியவில்லை.

பார்க்கவ பாதுகாப்புபேரவை என்ற சங்கத்தைஅமைக்க 5 நபர்கொண்ட குழுவில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. பார்க்கவ பாதுகாப்பு பேரவைசங்கம் இன்று வரை பல பார்க்கவ இளைஞர்களின் கல்விக்கு உதவுகிறது.அந்தசங்கத்தின் விதிமுறைகளை வகுத்து அளித்துள்ளார். பல பார்க்கவ சமூகமக்களின் பிரச்சினைகளை சரிசெய்ய பொருளாதார ரீதியாகவும் பக்கபலமாகவும் இருந்து வருகிறார்.

கடந்த ஆண்டு, சென்னையில் பல ஆண்டுகளாக இயங்கிவரும்  USHA USED MACHINERIES யில்பங்குதாரராக சேர்ந்துள்ளார். சென்னையில் பாரி இன்டஸ்டரீஸ் தொடங்கியுள்ளார். அது வெற்றிநடைபோடும் நிலையில், இப்போது அமீரகத்தில் சார்ஜாவில் ஒருஹோட்டல் தொடங்கவுள்ளார்.

இவ்வாறு திறமையும், கடினஉழைப்பும், உணர்வும், சமுதாயத்திற்கு தொடர்ந்து உதவியாக இருக்கும் திரு.புகழேந்தி அவர்களை நாம் அனைவரும் வாழ்த்துவோம்.

Spread the love