ஒரு பெண் சாதனையாளரை பற்றியது….
திருமதி லலிதா அசோகன் அவர்கள் 1970 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பத்தாம் தேதி திருச்சியில் திருகிருஷ்ணமூர்த்தி உடையார் சுசீலா அம்மாள் அவர்களுக்கு மகளாக பிறந்தார். திருச்சி ஹோலிகிராஸ் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் B.Sc Chemistry படித்தார்.
திருமதி லலிதா அசோகன் அவர்கள் சூழ்நிலையியல் துறையில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரி மாணவி. இவரது ஆராய்ச்சி தோல்பதனிடும் ஆலைகளின் கழிவுநீரில் உள்ளகுரோமியம் போன்ற உலோக அபாயங்களை சிக்கனமான முறையில் பழுப்பு நிலக்கரி கொண்டு விலக்குவது பற்றியது. இதனை தொடர்ந்த இவரது ஆராய்ச்சி வெளியீடுகள் சர்வதேச ஆராய்ச்சி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முனைவர் லலிதா அவர்கள் 2001 ஆம் ஆண்டு வேப்பந்தட்டை சேர்ந்த பொன்னுசாமி உடையார் செல்லம்மாள் அவர்களின் மகனான திரு அசோகன் அவர்களை மணமுடித்தார். இவர்களுக்கு தருண் கார்த்திக் என்ற ஒரு மகன் உண்டு. அவர் டெல்லி பிரைவேட் ஸ்கூல்- ஷார்ஜாவில் 11ஆம்வகுப்புபடித்துவருகிறார்.
முனைவர் திருமதி. லலிதா அசோகன் அவர்கள் தனது முதல் பணியை புதுக்கோட்டை J.J.COLLEGE OF ARTS AND SCIENCE கல்லூரியில் முதுநிலை சூழ்நிலையியல் துறையின்துறை தலைவராக தொடங்கி திருமணத்திற்கு பின் ஐக்கிய அரபுநாட்டை அடைந்து SGS GULF LTD என்கின்ற பன்னாட்டு நிறுவனத்தில் OIL &GAS மற்றும் ENVIRONMENTAL SCIENCE துறையில் QUALITY ASSURANCE பணியில்பணியாற்றிவந்தார்.
பின் தன் கணவரின் உந்துதலின்பேரால் 2010 ஆம்ஆண்டு PIONEER QUALITY CONSULTANCY எனும் நிறுவனத்தை சொந்தமாக தொடங்கினார். இந்த நிறுவனம் பத்து நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து 600 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை சம்பாதித்து தனது பத்தாம்ஆண்டில் காலடி எடுத்துவைத்துள்ளது. முனைவர் லலிதா அசோகன் அவர்கள் AJMAN மற்றும் UMM AL QUWAIN என்கின்ற இரு வேறுநாடுகளின் அரசு துறையினரால் சூழ்நிலையியல் மற்றும் உணவுபாதுகாப்புதுறையின் அங்கீகரிக்கப்பட்ட ஆலோசகராக கடந்த பத்து வருடங்களாக இருந்துவருகிறார்.