வாரம் ஒரு பாரக்கவன் அறிமுகம்- 146
திரு. R.R.K. மலைக்கண்ணன்
“குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்”
குறள் விளக்கம்:
என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்.
என்னும் வள்ளுவரின் வாக்கிற்கினங்க.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி R.R.K நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான திரு. R.R.K. மலைக்கண்ணன் அவர்களை பற்றிய அறிமுகம் இந்த வாரம்…
திரு.R.R. கருப்பையா உடையார் என்கிற சேது உடையார், திருமதி R.R.K.ரெங்கம்மாள் ஆகியோரின் மகனாக 05.10.1969 ல் பிறந்தார். திரு. R.R.K. மலைக்கண்ணன்
தேவகோட்டை டி பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியில் தனது பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பை திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரியில் பயின்றார்.
தனது மனைவி திருமதி.M. அருள்செல்வி மற்றும் தனது இரண்டு மகன்கள். M.A.ராம்ராஜ் , M.A.நவீன்ராஜ் ஆகியோர்களுடன் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் வசித்து வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரபலமான தொழில் நிறுவனங்களான
RRK Residency மற்றும் RRK எர்த் மூவர்ஸ் இவரது தொழில் நிறுவனங்கள் ஆகும்.
RRK Residency அனைவருக்கும் பரிச்சயமான அருகன்குலம் ரோடு, அறந்தாங்கியில் உள்ளது.
RRK எர்த் மூவர்ஸ் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரபலமான நிறுவனமாக செயல்பட்டு வருகிறது கட்டுமான துறையில் தனது பங்களிப்பை சிறந்த முறையில் செய்து வருகிறது இவரது நிறுவனம்.
தனது சிறப்பான ஒத்துழைப்பின் மூலம் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பின் புதுக்கோட்டை மாவட்ட அத்தியாயம் தொடங்க உறுதுணையாக செயல்பட்டு
பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு- புதுக்கோட்டை அத்தியாயத்தின் முதல் தலைவராக (2020-2021) பொறுப்பேற்றுள்ளார்.
அறந்தாங்கியில் தனது தொழிலில் சிறந்து விளங்கி அனைவரின் அன்பையும், நட்பையும், நற்பெயரையும் பெற்ற திரு. R.R.K. மலைக்கண்ணன் அவர்களை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு (PARKAVAN FORUM) பெருமை கொள்கிறது.
தொடர்புக்கு ,
திரு. R.R.K. மலைக்கண்ணன்
RRK Residency and Earth Movers, அறந்தாங்கி
கைப்பேசி- 98424-23376 ,94899-71376
04371-223376