Parkavan Forum

Support : +91 98844 29991

திரு.சி.சுப்பிரமணியன்

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம் – 149
திரு.சி.சுப்பிரமணியன்
Exide Battery & RO Systemsபெரம்பலூர்

“செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்.”

ஒரு செயலைச் செய்யத் தொடங்குபவன் அதைச் செய்யும் முறையாவது, அச்செயலை இதற்கு முன்பு செய்திருப்பவனின் கருத்தை அறிந்து கொள்வதேயாகும்.

தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்குவது ஒரு எண்ணமாக இருந்தாலும் , அதை அனுபவத்துடன் ஆரம்பிக்க வேண்டும் என்ற உந்தலில் பல்வேறு முன்னணி நிறுவனங்களில் வேலைக்கு சென்று தனது அனுபவத்தை பெருக்கிக் கொண்டு HP நிறுவனத்தில் உயரிய பொறுப்பில் இருந்தும் அதுலிருந்து விலகி சுயமாக தொழில் தொடங்கி வளர்ந்துவரும் இளம் தொழில் முனைவோரான திரு.சி.சுப்பிரமணியன் அவர்கள் பற்றிய பதிவு இது…..

திரு. சி.சுப்பிரமணியன் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் , பேரளி கிராமத்தில் 05-05-1986 ஆம் ஆண்டு திரு. சிங்காரவேல் உடையார், திருமதி. அசலாம்பால் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு ஒரு சகோதரரும், ஒரு சகோதரியும் உள்ளனர்.

திரு.சி.சுப்பிரமணியன் அவர்கள் தனது பள்ளிப்படிப்பை பனிமலர் பள்ளி பெரம்பலூரிலும் , கல்லூரிப் படிப்பை Bishop Heber College திருச்சியிலும் பயின்றார்.

திரு.சி.சுப்பிரமணியன் அவர்கள் 02-02-2014 ஆம் ஆண்டு திருமதி.உமா அவர்களை மணந்தார். இத்தம்பதியருக்கு இனியா, ஹர்ஷினி என்ற இரு மகள்களும், ஆதி கிருஷ்ணா என்ற மகனும் உள்ளனர்.

பெரம்பலூரில் தற்பொழுது Vinayaga Battery மற்றும் Vinayaga RO system என்ற இரண்டு நிறுவனங்களை கடந்த 5 ஆண்டுகளாக சிறந்த முறையில் நடத்தி வருகிறார்..

விநாயகா பேட்டரி ( Exide )
இன்வெர்ட்டர் , கார் பேட்டரி ,ஆட்டோ பேட்டரி வீட்டு உபயோக பேட்டரி என அனைத்து விதமான பேட்டரிகள் மற்றும் இன்வெர்ட்டர்களை சிறந்த முறையில், குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார். EXIDE Battery Distributor ஆகவும் உள்ளார்.

விநாயகா RO SYSTEM
RO System-த்தை வீடு,கடை,வணிக நிறுவனங்கள்,பள்ளி,கல்லூரி என அனைத்திற்கும் சிறந்த முறையில் விற்பனை செய்து , சரியான நேரத்தில் Service செய்தும் வருகிறார்.. RO System- த்திற்கு தேவையான அனைத்து உதிரி பாகங்களையும் விற்பனை செய்து வருகிறார்..

வளர்ந்து வருகின்ற ஒரு சிறந்த தொழில் முனைவோரை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.

தொடர்புக்கு :
திரு.சி.சுப்பிரமணியன்
விநாயகா பேட்டரி & RO Systems
EB ஆபிஸ் எதிரில்
பெரம்பலூர்
9786419881
——————————————-
Exide Battery & RO Systems

Spread the love