Parkavan Forum

Support : +91 98844 29991

திரு.இரா.ராஜு

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம் – 150

திரு.இரா.ராஜு
Sri Vinayaga Air Travels

” அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும். ”

நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும் .

தொழில் முனைவோருக்கு வழிகாட்டியாக ,விவசாய குடும்பத்தில் பிறந்து தனது மிக சிறந்த அனுபவத்துடன் தனது தொழிலில் சிறந்து விளங்கி, பெரம்பலூரின் முன்னணி நிறுவனமாக திகழும் ஸ்ரீ விநாயகா ஏர் டிராவல்ஸ் உரிமையாளர் திரு.இரா.ராஜு அவர்கள் பற்றிய பதிவு இது…..

திரு.இரா.ராஜு அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் , பனங்கூர் கிராமத்தில் 08.09.1969 ஆம் ஆண்டு திரு. இராமசாமி உடையார் , திருமதி. செல்லம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரரும், இரண்டு சகோதரியும் உள்ளனர்.

திரு.இரா.ராஜு அவர்கள் 17-06-2001 ஆம் ஆண்டு திருமதி.செல்வி அவர்களை மணந்தார். இத்தம்பதியருக்கு ஜெகனீஸ்வர் , விக்னேஷ்வர் என இரு மகன்கள் உள்ளனர்.

பெரம்பலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் தற்பொழுது மிகவும் பிரபலமான
ஸ்ரீ விநாயகா ஏர் டிராவல்ஸ் நிறுவனத்தை 18.04.1997 ல் தொடங்கி 23 ஆண்டுகளாக சிறந்த சேவையை ஆற்றி வருகிறார்.

ஸ்ரீ விநாயகா ஏர் டிராவல்ஸ் :
Air Ticket, பாஸ்போர்ட் ,விசா, Money Exchange என அனைத்து சேவைகளையும் செய்து வருகிறார். நம்முடைய சொந்தங்கள் பலரின் வெளிநாட்டு கனவுகளை நினைவாக்கி கொடுத்துள்ளார். Digital உலகமாக மாறிவிட்ட இந்த காலத்திலும் Online Ticket விலையை விட குறைவான விலைக்கு Air Ticket களை கொடுக்கிறார். இது தன்னுடைய இத்தனை வருட அனுபவத்தால் மட்டுமே சாத்தியம் என்று பெருமிதத்துடன் கூறுகிறார்.

பார்க்கவ குல சங்கத்தில் தனது பங்களிப்பை தொடர்ந்து செலுத்தி வருகிறார். அரிமா சங்கத்தில் நிர்வாக குழு உறுப்பினராக உள்ளார் . இது போன்று பல்வேறு சமூக அமைப்புகள் மூலம் தனது சேவையை ஆற்றி வருகிறார்.

தன்னம்பிக்கையுடன் உயர்ந்த ஒரு சிறந்த பார்க்கவரை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.

தொடர்புக்கு :
திரு.இரா.ராஜு
ஸ்ரீ விநாயகா ஏர் டிராவல்ஸ்
பெரியார் காம்ப்ளக்ஸ்
பெரம்பலூர்
9942499080 | 9443445787
——————————————-

Spread the love