Parkavan Forum

Support : +91 98844 29991

திரு.ரமேஷ்

வெளிநாட்டு வேலை என்பது இன்றும் பலருடைய கனவாக உள்ள நிலையில், சிங்கப்பூர் சென்று பணியில் இருந்துகொண்டே வாழ்வில் உயரவேண்டும் என்பதற்காக மேற்படிப்புபடித்து, தனது உழைப்பால் உயர்ந்துள்ள திரு.ப. ரமேஷ் என்பவரை பற்றிய பதிவுதான் இது…..

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் குட்டிசிங்கப்பூர் என்றழைக்கப்படும் கீழப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திரு.பச்சமுத்து உடையார் திருமதி.வாசுகி அம்மாள் தம்பதியருக்கு திருரமேஷ் அவர்கள் மகனாக பிறந்தார். இவருக்கு ஒரு சகோதரியும் உண்டு. அவரது பெயர் திருமதி.சங்கீதா செல்வராஜ். அவர் தனது தாய்மாமனாகிய திரு.செல்வராஜ் (ஊராட்சிமன்றதலைவர்) அவர்களை மணந்துகொண்டார்.

திரு.ரமேஷ் மனைவியின் பெயர் திருமதி.கீதாரமேஷ் இவர்களுக்கு வர்ணிகா என்ற ஒரு மகளும், தேவேஷ் என்று ஒரு மகனும் உள்ளனர்.

திரு.ரமேஷ் அவர்கள் திருச்சி ஈ.வே.இரா கல்லூரியில் B.COM பட்டம் பெற்றார். பின்பு 1997  ஆம் ஆண்டு அவர் சிங்கப்பூர் சென்றார். அங்கு எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். மேலும் சாதிக்க வேண்டும் என்ற அவரது மனஉந்துதல் அவரை பாதுகாப்புதுறையில் பட்டங்களைப் பெறவைத்தது. அதன்பின் கட்டுமானத்துறையிலும், பெட்ரோ கெமிக்கல் துறையிலும் பாதுகாப்பு அதிகாரியாக தொடர்ந்து 15 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி வந்தார்.அதற்குப்பரிசாக அவருடைய நிறுவனம் அவருக்கு சிங்கப்பூர் குடியுரிமை வழங்கி அவரை பாராட்டியது. தனது தாய் தந்தையரை கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசையால் சிங்கப்பூர் குடியுரிமையைரத்து செய்துவிட்டு 2014 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு திரும்பி வந்தார்.

இங்கு வந்த பின்னர் கடந்த 5 ஆண்டுகளாக LIONS CLUB இயக்குனராகவும் சேவையாற்றி வருகிறார். மேலும் ரியல் எஸ்டேட் மற்றும் நிதிசேவை (பைனான்ஸ்) செய்து பலருக்கு உறுதுணையாக இருக்கும் நம்பார்க்க  வரை மனதாரபாராட்டுகிறோம்.

தொடர்புஎண்: 9597423292

Email: rameshkpr@yahoo.com

Spread the love