அமீரகத்தில் கால்பதித்து , உழைத்து சாதித்த திருமதி. தேவிகுமரன் என்னும் பெண்மணி பற்றிய பதிவு.
திருமதி . இர. தேவிகுமரன் அவர்கள் 02-09-1984 அவர்கள் தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி என்னும் ஊரில் M.D. ரவி உடையார், பாரதி அம்மாள் அவர்களுக்கு மகளாகப் பிறந்தார். தனது பள்ளிப்படிப்பை பாலக்கோடு ஸ்ரீவித்யாமந்திர் மெட்ரிக் பள்ளியில் பயின்றார். உயர்நிலைக்கல்வியை இராசிபுரம் S.R.V. உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். பின்னர் ஈரோடு செங்குந்தர் பொறியியல்கல்லூரியில் B.E.(Electronics and Communication Engineering) பயின்றுள்ளார். கல்லூரியில்Ist Class with Distinction தேர்ச்சிபெற்றார். தற்பொழுது Neway Flow Control DMCC -Oil and Gas Valve Industry இல் Project Manager ஆக பணிபுரிகின்றார். 2009 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிந்துவருகிறார். இவருக்கு ஜீவானந்தன் ரவி என்னும் ஒரு சகோதரர் உள்ளார். அவர் CTS -USA வில் பணிபுரிகிறார்.
திருமதி.R.தேவிகுமரன் அவர்களுக்கு 2006 ஆம் ஆண்டு திரு.குமரன் அவர்களோடு திருமணமானது. திரு.குமரன் அவர்கள் Sublime – UK வில் Global Technical Director ஆக பணி புரிகின்றார். இத்தம்பதியருக்கு குருநாத் குமரன் மற்றும் ஹிரண்குமரன் என்னும் இருமகன்கள் உள்ளனர். ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னால் ஒருஆண் இருப்பார் என்பதற்கேற்ப திருமதி.தேவிகுமரன் அவர்களின் வெற்றிக்கு பின்னால் தன் கணவர் திரு.குமரன் இருக்கிறார் என்பதை மிகவும் கர்வத்துடன் கூறுகிறார் திருமதிதேவிகுமரன். இத்தகைய திறமையுள்ள பெண்மணியை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறது பார்க்கவன்ஃபோரம்.