‘பார்க்கவன்’ குடும்பமாய் உலவும்..
தொழில் வித்தகர்களுக்கு..
தோழமையோடு
தோள் தந்து..
தொழில் இனத்துடன் இனமாக அறிமுகம்.. கொண்டு..!
உலகையே இணைக்கும் பாலமாக நின்று!
வாங்கும் பொருளை உறவுகளின் தொழிலில் கண்டு!
அதற்கான சலுகைகளை
நிலுவையின்றி தந்து!
அரசின் திட்டத்தின் செயல்வீரர்களை பெற்று…
வெவ்வேறு தொழில் வேந்தர்களே ஒன்றிணைத்து..
ஒன்றுபட நேரில் இன்று சனிக்கிழமை சந்தித்து..
வலிமையோடு
வல்லமை தந்து..
வெல்வதற்கான
வெற்றிகளை
சொல் வழியே
‘செல்’ வழியே..
உயர்த்துகிறோம்!
‘பார்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு’ சக்தியாய்..
*கவிஞர்-செ.செல்வசூர்யா*