இன்று நாம் பார்க்கப் போகும் பதிவு… திரு.சே. சிவனேசன் சேதுபதி [LIVE நாயகன்] என்னும் பார்க்கவனை பற்றியது…

திரு. சிவனேசன் சேதுபதி அவர்கள் 03-10-1983 அன்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் ஆலத்தூர் என்கின்ற கிராமத்தில் திரு.வே.சேதுபதி உடையார், திருமதி.சே.வளர்மதி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவரது மூத்த சகோதரர் திரு.சுதாகர் சேதுபதி அமீரகத்தில்  ஒரு பன்னாட்டு நிறுவனத்தில்  Facility Engineer ஆக பணிபுரிகின்றார். இவருக்கு ஒரு சகோதரியும் உண்டு. அவரது பெயர் திருமதி ஆனந்தி M.com,M.phil அல் கரீம் உயர்நிலை பள்ளியில் தாளாளராக பணியாற்றி வருகிறார்.இவரது கணவர் Dr.திரு. ஷாம் BHMS( Homeopathy) கும்பகோணத்தில் மதிமலர் மெடிக்கல் சென்டர் நடத்தி வருகின்றார்.  இவர்கள் அனைவரும் தற்பொழுது கூட்டுக்குடும்பமாக கும்பகோணத்தில் வசித்து வருகின்றனர்.

திரு சிவனேசன் சேதுபதி அவர்கள் ஒரு நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்து DMLT, B.sc, M.sc(Biotech),Post Graduate diploma in Bioinformatics பயின்றுள்ளார்.பின்னர் Mediclone Biotech என்னும் நிறுவனத்தில் Research Assistant ஆக 1 ஆண்டு பணியாற்றினார். பின்னர் 2008 ஆம் ஆண்டு  அமீரகத்திற்கு வந்து NMC ( Trading) என்னும் நிறுவனத்தில் Sales Representative ஆக பணிபுரிந்தார். அங்கு Sales Supervisor ஆக பதவி உயர்வு பெற்றார். பின்னர் 2014 ஆம் ஆண்டு Trivitron Health care நிறுவனத்தில் Asst manager ஆக பணியில் சேர்ந்து இன்று Manager (IVD Division) ஆக பணிபுரிகிறார்.

இவர் 12-12-2013 அன்று உளுந்தூர்பேட்டையை சேர்ந்த திரு.P. வசந்தகுமார் உடையார், திருமதி v. விஜயலட்சுமி அம்மாள் அவர்களின் புதல்வியான செல்வி.வ.நிவேதாவை மணந்தார். திருமதி . நிவேதா அவர்களின் தந்தை EB யில்Head Draftsman ஆக பணிபுரிந்து கடந்த ஜூன் மாதம் பணி நிறைவு பெற்றார். நிவேதா சிவனேசன் B.E(ECE) பயிற்றுள்ளார்.திரு. சிவனேசன் சேதுபதி, திருமதி நிவேதா சிவனேசன் தம்பதியருக்கு அமுதன், அருட்செல்வன் என்று இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் கும்பகோணத்தில் விவசாயமும்,  உழவன் டிரன்ஸ்போர்ட் என்ற பெயரில் மூன்று மினி பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.

1.கும்பகோணம்  – துக்காச்சி

2.கும்பகோணம் – திருநாகேஸ்வரம்

3.குடவாசல் – வடமட்டம்

இன்றும் கும்பகோணத்தில் கூட்டுக்குடும்பமாக வாழ்வதில் பெருமை கொள்கின்றார் திரு சிவனேசன் சேதுபதி அவர்கள்.

துபாய் இருந்து ஒலிபரப்புபாகும் Live programமை இவர்தான் தானே முன்வந்து திறம்பட, சிறப்பாக நடத்தி வருகின்றார்.இந்த LIVE நாயகனை நமது பார்க்கவ சொந்தங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறது பார்க்கவன் ஃபோரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *