இன்று நாம் பார்க்கப் போகும் பதிவு, திரு.சேகர் அவர்களைப் பற்றியது…

திரு.சேகர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா தெற்குப்பட்டி கிராமத்தில் 10-08-1987 அன்று திரு.மணி உடையார் திருமதி.நாகம்மாள் தம்பதியருக்கு இளைய மகனாக பிறந்தார். இவருக்கு ஒரு மூத்த சகோதரரும் சகோதரியும் உள்ளனர். அவர்கள் சொந்த ஊரில் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்கள்.இவர் தனது எட்டாம் வகுப்பு வரை பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் பயின்றார். பின்னர் புனித  ஆரோக்கிய அன்னை உயர்நிலைப்பள்ளி கீரனூர் பத்தாம் வகுப்பு வரை பயின்றார். பின் DCE(Diploma in civil Engineering) திருச்சியில் உள்ள Govt.Polytechnic College யில் பயின்றார். கல்லூரி பயின்ற உடன் டெல்லி,ஜம்மு & கஷ்மீர், உத்தராஞ்சல் போன்ற பல வட மாநிலங்களில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தார். அதன்பின் 2008  ஆண்டு அமீரகத்திற்கு வந்தடைந்து 3 ஆண்டுகள் பணிபுரிந்தார்.பின் 4 ஆண்டு ஓமானில் பணிபுரிந்தார். பின் மீண்டும் அமீரகத்தின் நான்காண்டுகளாக ALEC என்னும் பன்னாட்டு நிறுவனத்தில் QA/QC(Manager) ஆக பணிபுரிகின்றார். மேலும் B.Tech -karnataka institute of open University இல் பயின்றார். ஒரு ஏழ்மையான விவசாய குடும்பத்தில் பிறந்து தன் சுய வருமானத்தில் கல்வி பயின்று இன்று அமீரகத்தில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மேலாளராக திரு சேகர் அவர்கள் உயர்ந்துள்ளார் என்பதே  இவர் ஆற்றிய  சாதனை.

திரு.சேகர் அவர்கள் 05-07-2012 அன்று காடப்பிள்ளையார்பட்டியை சேர்ந்த திரு. சந்திரசாமி உடையார் திருமதி.கமலம் சந்திரசாமி அம்மாள் அவர்களின் மகளான செல்வி மாலாவை B.sc(Maths) மணந்தார். திருமதி.மாலா சேகர் அவர்கள் TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர். மேலும் சில ஆண்டுகள் ஒரு பள்ளியில்  ஆசிரியையாக பணிபுரிந்தார். இவர்களும் விவசாயம் மற்றும் நெல் வியாபாரம் செய்கின்றனர். இவருக்கு விஷாந்த் என்ற ஒரு மகனும் சஞ்சீனா என்ற ஒரு மகளும் உள்ளனர்.

திரு .சேகர் அவர்கள் நமது பார்க்கவ சமுதாயத்திற்காக கட்டுமானத்துறையில் எவ்வித உதவி ஆனாலும் தன்னால் இயன்றவரை உதவி செய்வேன் என்று உறுதியளிக்கிறார். இத்தன்னார்வலரை நமது பார்க்கவ சமுதாயத்திற்கு அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறது பார்க்கவன் ஃபோரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *