படித்து பல துறையில் சாதனை படைத்த பார்க்கவனின் வரிசையில் இன்று சிறந்த தொழிலதிபராக சிறந்த பத்திரிக்கை ஆசிரியராக சிறந்த சமூக ஆர்வலராக வெற்றிவாகை சூடி கொண்டிருக்கும் திரு.இரா. சங்கர் உடையார் என்னும் பார்க்கவரை பற்றிய பதிவு இது…..

திரு இரா சங்கர் உடையார் அவர்கள் 16-11-1971 அன்று அரியலூர் மாவட்டத்தில் பல்லகாவேரி என்னும் சிற்றூரில் இராமசாமி உடையார்(கிராம நிர்வாக அலுவலர்), பழனியம்மாள் அவர்களுக்கு மகனாக பிறந்தார். நான்கு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி இவர் உடன் பிறந்தவர்கள். இவரது மனைவி பெயர் திருமதி.ச. பாமா. இத்தம்பதியருக்கு சௌமியா,சாதனா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தவர், தன்னை ஒரு சிறந்த தொழிலதிபராக, அந்த பத்திரிக்கை ஆசிரியராக இருந்த பொழுதும் தன்னை ஒரு சிறந்த சமூக  ஆர்வலராக தன்னை முதன்மைப் படுத்தி கொள்வதில் பெருமை கொள்கிறார். கலாம் விருது ,விஷன் 2020 விருது, ஆ விருதுகள், சமூக ஆர்வலர் விருதுகள், லயன்ஸ் கிளப்பில் சிறந்த சேவைக்கான விருதுகள்,சிறந்த பத்திரிக்கையாளர் கான விருதுகள், சிறந்த வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் போன்ற தனது சேவைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். மேலும் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினத்தன்று திரு.தேவசகாயம்-IAS அவர்களின் முன்னிலையில் கூட்டமைப்பாக செயல்பட்டு மத்திய மற்றும் மாநில அரசுக்கு அனுப்பிய கோரிக்கையின் மூலம் இராமேஸ்வரத்தில் பேய்க்கரும்பில் கூடுதல் இடம்பெற்று அருங்காட்சியகம் நிறுவப்பட்டது திரு.சங்கர் அவர்களின் சேவை பாராட்டத்தக்கது. இவர் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கு பெற்றுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.

திரு.சங்கர் அவர்களின் பொறுப்புகள்:

1. LAACO(Legal Awareness and Anti-Corruption Organization) அமைப்பின் மாநிலத் தலைவர்.

2.FACT இந்தியா அமைப்பின் மாநில இணை  செயலாளர்.

3. அரியலூர் நகர வளர்ச்சி சங்கத்தின் பொறுப்பாளர்.

4. ஸ்வீட்ஸ் அறக்கட்டளையின் இயக்குநர்.

5. இராமேஸ்வரத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் ஹவுஸ் ஆப் கலாம் டிரஸ்டிங் பொறுப்பாளர்.

6. லயன்ஸ் கிளப் இன் அறியலூர் சங்கத்தலைவர்.

பத்திரிக்கையாளராக இவரது பொறுப்புகள்:

1. NDTV செய்தி ஆசிரியர்.

2.நமது இந்தியா செய்தியாசிரியர். 3.இரண்டாம் சுதந்திரம் பத்திரிக்கையில் தலைமை செய்தி ஆசிரியர்.

4.ஊழல் ஒழிப்பு பத்திரிக்கையில் செய்தி ஆசிரியர்.

5. அன்னப்பறவை பத்திரிக்கையில் தலைமை செய்தி ஆசிரியர்.

சங்கர் நேத்தாலயா கண் மருத்துவமனை அரியலூர் ராயல் சென்ட்டிரியல் மற்றும்  L&T  நிறுவனங்களுடன் இணைந்து 500க்கும் மேற்பட்ட கண் பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலமாக அவர்கள் மீண்டும் சிறந்த கண்பார்வை பெற உறுதுணையாக இருந்துள்ளதை தன் வாழ்வின் சிறந்த சேவையாக பெருமை கொள்கின்றார்.

இவரது நிறுவனங்கள்:

1. அர்ச்சனா ஸ்வீட்ஸ் 2.அர்ச்சனா பழமுதிர்ச்சோலை

3. நித்தியா உணவகம்

4. நித்தியா ஜூசர்ஸ்

5. வெங்கடேஸ்வரா சைவம்.

6. வெங்கடேஸ்வரா அசைவம்.

7.திருமுருகன் அசைவம்.

8. ஹைவா பிரியாணி

9. M.K Traders போன்ற பல தொழில்களை சிறப்பாக ஆற்றி வருகின்றார்.

தொடர்பு எண்:+919600411700

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *