ஒவ்வொரு பார்க்கவனின் சிறப்புகளை சேகரித்து, பட்டியலிட்டு பெருமைப் படுத்துகின்றோம். அந்த வரிசையில்  இன்று பார்க்க விருக்கும் பார்க்கவன் புள்ளியியலில் சிறந்து கல்வித்துறையில் பெரும் பணியாற்றி பார்க்கவ குலத்திற்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் மதிப்பிற்குரிய முனைவர்.திரு.இரா. இராவணன் அவர்களைப் பற்றிய பதிவு…

முனைவர் திரு.இரா. இராவணன் M.Sc.,M.Phil.,Ph.D., அவர்கள் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் பூமாரி என்னும் சிற்றூரில் திரு. இராமானுஜம் உடையார் திருமதி. ருக்மணி இராமானுஜம் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் B.Sc.,(Statistics),M.Sc.,(Statistics),M.Phil.,(Statistics) பயின்று மேலும் சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் Ph.D.,(Statistics) பெற்று மாநில கல்லூரியிலேயே புள்ளியியல் துறை உதவி பேராசிரியராகவும், இணை பேராசிரியராகவும் (Associate Professor), புள்ளியியல் துறை தலைவராகவும்(Head Department of Statistics) பணியாற்றி, தமிழகத்தில் பல்வேறு அரசு கல்லூரியில் முதல்வராக மிகச் சிறப்பாக பணிசெய்து, பின்னர் அவர் தான் பயின்ற உலகப் புகழ்பெற்ற சென்னை மாநிலக்கல்லூரி லேயே முதல்வராக(Principal) பணியாற்றினார்.

தற்பொழுது பதவி உயர்வு பெற்று 09-09-2019 முதல் தமிழ்நாடு அரசு உயர்கல்வி துறையின், கல்லூரி கல்வி இயக்ககத்தில் சென்னை மண்டல இணை இயக்குனராக(Joint Director of Collegiate Education,Chennai Region,Chennai) பணியாற்றுகிறார்.

திரு.இரா.இராவணன் அவர்கள் கல்வித் துறையில் வளர்ந்து படிப்படியாக உயர அவரது மனைவி திருமதி.இரா. சசிகலா(B.A) அவர்கள் முழு ஒத்துழைப்பும், ஊக்கமும், உற்சாகமும் அளித்து அவர் வளர பெரும்  பங்காற்றியவர். இத்தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது மகன் Er.R. சரவணன் B.Tech., பயின்று அமெரிக்காவில் M.S., முடித்து அங்கேயே மென் பொறியாளர் (Software Engineer) ஆக COMMWALT,(USA) என்ற நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.இவரது  மகள் இரா. பிரியா B.A., படித்துள்ளார்.

முனைவர்.திரு.இரா. இராவணன் அவர்களுக்கு புள்ளியியல் துறையில் ஆராய்ச்சி,ஆலோசனை, கற்பித்தலில்  29 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் 11&12 வகுப்பு பாட புத்தகத்தின் (புள்ளியியல்) ஆசிரியர் மற்றும் விமர்சகராக 2004&2017 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார்.தேசிய மற்றும் சர்வதேச அளவில் புள்ளியியல் துறை சார்ந்த பல மாநாடு மற்றும் கருத்தரங்குகளில் செயலாளராக பணியாற்றினார்.19 மாணவர்கள் அறிவியல் நிறைஞர் பட்டம் பெறவும் ,9 மாணவர்கள் முனைவர் பட்டம் பெறவும் ஆராய்ச்சி மேற்ப்பார்வையாளராக இவர் ஆற்றிய பணி சிறப்பானது.

முனைவர் திரு இரா இராவணன் அவர்களின் தொழில்முறை அனுபவங்கள்:

1. 1990-1996 -புள்ளியியல் துறையில் விரிவுரையாளர்,S.S. Govertment Arts college, திருத்தணி.

2. 1996-2017- புள்ளியியல் துறையில் இணை மற்றும் தலைமை பேராசிரியர், Presidency College, Chennai.

3. 11-12-2017 முதல் 01-05-2018 வரை- முதல்வர், அரசு  கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாகர்கோவில்.

4. 02-05-2018 முதல் 30-06-2018 வரை முதல்வர், திரு. கோவிந்தராஜ் அரசு கலைக்கல்லூரி, திண்டிவனம்.

5. 30-06-2018 முதல் 09-09-2019 வரை  முதல்வர், Presidency College, Chennai.

6. 09-09-2019 முதல் சென்னை மண்டல உயர் கல்வி துறையில் கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் இணை இயக்குனர்.

முனைவர். திரு. இரா இராவணன் அவர்களின் விருதுகள்:

1. 2014 ஆம் ஆண்டில் ஆசிரியர் செம்மல் (Best Teacher of Dr.Radhakrishnan Award)

2. ஜூன் 2, 2018 ஆம் be ஆண்டு , Heartfulness Institute, USA – Outstanding Contribution in the field of Education என்ற விருதை  அளித்தது.

திறம்பட பணியாற்றும் இவர் மேலும் பல பதவிகள் பெற்று நம் இனத்திற்கு பெருமை சேர்த்திட பார்க்கவன் ஃபோரம் வாழ்த்துகிறது.

Contact Number:+91-9840375672,

+91-9444221627.

Email ID: ravananstat@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *