இன்று நாம் பார்க்கப் போகும் பதிவு,2007 ஆம் ஆண்டு  அமீரகத்தில் கால் பதித்து , உழைத்து  சாதித்த  திருமதி. தேவி குமரன்  என்னும் பெண்மணி  பற்றிய பதிவு….

திருமதி .இர.தேவி குமரன் அவர்கள் 02-09-1984 அவர்கள் தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி என்னும் ஊரில் M.D. ரவி உடையார், பாரதி  அம்மாள் அவர்களுக்கு மகளாகப் பிறந்தார். தனது பள்ளிப்படிப்பை பாலக்கோடு ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில் பயின்றார். உயர்நிலைக் கல்வியை இராசிபுரம் S.R.V. உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பின்னர் ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் B.E.(Electronics and Communication Engineering) பயின்றுள்ளார். கல்லூரியில் Ist Class with Distinction  தேர்ச்சி பெற்றார். தற்பொழுது Neway  Flow Control DMCC -Oil and Gas Valve Industry இல்  Project Manager ஆக பணி புரிகின்றார். 2009 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஜீவானந்தன் ரவி என்னும் ஒரு சகோதரர் உள்ளார். அவர் CTS -USA வில் பணிபுரிகிறார்.

 திருமதி.R.தேவி குமரன் அவர்களுக்கு 2006 ஆம் ஆண்டு திரு.குமரன் அவர்களோடு திருமணமானது. திரு குமரன் அவர்கள் Sublime – UK வில் Global Technical Director ஆக பணி புரிகின்றார். இத்தம்பதியருக்கு குருநாத் குமரன் மற்றும் ஹிரண் குமரன் என்னும் இரு மகன்கள் உள்ளனர். ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னால் ஒரு ஆண் இருப்பார் என்பதற்கேற்ப திருமதி தேவி குமரன் அவர்களின் வெற்றிக்கு பின்னால் தன் கணவர் திரு.குமரன் இருக்கிறார் என்பதை மிகவும் கர்வத்துடன் கூறுகிறார் திருமதி தேவி குமரன். இத்தகைய திறமையுள்ள பெண்மணியை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறது பார்க்கவன் ஃபோரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *