இன்றைய பதிவு அமீரகத்தில் நமது அன்னை மொழியை நம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் திருமதி.இரா.கலைச்செல்வி அரசளகுமார் அவர்களை பற்றிய பதிவு…..

 திருமதி இரா. கலைச்செல்வி அரசளகுமார் அவர்கள் செப்டம்பர் மாதம் 1983 ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் கிராமத்தில் ராஜமாணிக்கம், மல்லிகா அவர்களுக்கு மூத்த மகளாகப் பிறந்தார். தனது தந்தையின்(JDO, TWAD Board) பணி நிமிர்த்தமாக தனது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை கடலூரில் முடித்தார். M.Sc., M.Phil.,(Chemistry) யில் First class with Distinction பெற்ற இவர் கடலூரில் உள்ள C.K.N College for women-யில் சிறப்பு விரிவுரையாளராக பணியாற்றினார். ஒரு பெண்ணின் வெற்றி, ஒரு பாதி அவர்களின் பெற்றோருக்கும் மறுபாதி அவரின் கணவருக்கும் உரித்தானது. இதை இரண்டையும் நிறைவாகப் பெற்றதாக பெருமிதம் கொள்பவர். பெற்றோரின் ஆசியுடன் பட்டப்படிப்பில் சிறந்து விளங்கியது மட்டுமின்றி தட்டச்சு, சுருக்கெழுத்து, கவிதை எழுதுவது மற்றும் கைவினைப் பொருட்கள் செய்வது போன்ற பல கலைகள் கற்றறிந்தவர்.

 பெற்றோரின் ஆசியுடன் 2007-ஆம் ஆண்டு திரு. அரசளகுமார்முத்துசாமி (Service Manager, Culligan Intl.) அவர்களின் வாழ்க்கை துணையானார். 2007-ல் இருந்து கணவருடன் துபாயில் வசித்து வருகிறார். தனது கணவரின் ஊக்குவித்தலால் தனது தோழிகளுடன் இணைந்து நமது “அன்னை மொழியை” இன்றைய தலைமுறை கற்றுக் கொள்ள அமீரகத்தில் “இலவச தமிழ் வகுப்புகளை” தொடங்கி சிறப்பான முறையில் பயிற்சி அளித்துவருகிறார்.

இத்தம்பதியருக்கு ரோஷ்னி என்ற மகளும், சாரதி என்ற மகனும் உள்ளனர். தனது பெற்றோர் தன்னை சிறந்த மகளாக உருவாக்கியதை போன்று தன் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்காக சிறந்த வேலை வாய்ப்புகளை விடுத்து சிறந்த இல்லத்தரசியாகவும், தமிழ் மீது கொண்ட பற்றினால் தமிழ் சேவகியாகவும் விளங்குவதில் பெருமை கொள்கின்றார். இவரது பதிவு பலருக்கும் உத்வேகமாக அமையும் என்பதில் ஐயமில்லை.இவரை நம் பார்க்கவ குலத்திற்கு அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறது பார்க்கவன் ஃபோரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *