சாதிப்பதற்கு கல்வி ஒரு தடை இல்லை,கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் கொண்டு வாழ்க்கையில் வெற்றி அடைந்த திரு.இராஜேந்திரன் என்னும் பார்க்கவரை பற்றிய பதிவு இது….

திரு.இராஜேந்திரன் அவர்கள் 04-03-1964 அன்று புதுக்கோட்டை மாவட்டம், பொன்னம்பலம் என்னும் சிற்றூரில் திரு. சின்னக்கண்ணு உடையார், பூவாயி அம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள், இரண்டு சகோதரி ஆவார். திரு.இராஜேந்திரன் உடையார் அவர்கள் 1985 ஆம் ஆண்டு திரு. கோவிந்தன் உடையார், கமலம் அம்மாள் அவர்களின் மகளான திருமதி. தவசிமணி இராஜேந்திரன் அவர்களை மணந்தார். இத்தம்பதியருக்கு ரம்யா, ரஞ்சிதா என்ற இரு மகள்களும் ரஞ்சித் இன்று ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகளான ரம்யாவுக்கு திருமணமாகிவிட்டது. அவரது கணவரின் பெயர் பூபாலன். அவர் பெங்களூரில் PK METALS என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இவர்களுக்கு விக்கி, காவியா என்று இரு குழந்தைகள் உள்ளனர். இரண்டாம் மகளான செல்வி.ரஞ்சிதா B.Sc(CSC),MBA(HR) படித்து அமீரகத்தில் மூன்றாண்டுகள் பணியாற்றினார். இளைய மகனான இரஞ்சித் DCE.,BE(Civil Engg) படித்து தற்பொழுது தனது சகோதரியுடன் சேர்ந்து தனது தந்தைக்கு உதவியாக பணியாற்றுகின்றனர்.

திரு.ராஜேந்திரன் உடையார் அவர்கள் 1986 ஆம் ஆண்டு அமீரகத்தில் கால் பதித்து, கிடைத்த வேலையை செய்து , அமீரகத்தில் ஓட்டுநர் உரிமம் பெற்று, துபாய் பள்ளி ஒன்றில் பள்ளி ஓட்டுநராக பணியாற்றினார். அத்துடன்  அவர் ஓயவில்லை,வாழ்வில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற எண்ணம் கொண்டு தன்னம்பிக்கையுடன் 1991 ஆம் ஆண்டு GOODLUCK ALUMINUM EST. என்ற நிறுவனத்தை தனது நண்பர்களுடன் தொடங்கினார். வாழ்வில் தன் தரத்தை உயர்த்தினால் தான் தன் குழந்தைகளின் எதிர்காலம் உயரும் என்ற எண்ணத்தில் 1995 ஆம் ஆண்டு முதல் பங்குதாரர்கள் இன்றி தனி மனிதனாக இன்று வரை தன்னம்பிக்கையுடன் Umm Al qwainயில் நடத்தி வருகின்றார்.

இத்தகைய தன்னம்பிக்கையுள்ள பார்க்கவனை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறது பார்க்கவன் ஃபோரம்.

Contact No:050-7373349

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *