“வெற்றி என்பது நமது பிறப்புரிமை அதை நாம் அடைந்தே தீருவோம்” என்ற  தாரக மந்திரத்தோடு மாணவர்களின் வாழ்க்கையில் ஒளி விளக்கு ஏற்றும் முனைவர்.திரு. இராஜேஷ் என்னும் பார்க்கவனை பற்றிய பதிவு இது…..

முனைவர்.திரு.K.M. இராஜேஷ் அவர்கள் 05-06-1986 அன்று  அரியலூர் மாவட்டம், மேலக்கருப்பூர் அஞ்சல்,பொய்யூர் என்ற சிற்றூரில்  ஒரு சிறு  விவசாயியான  திரு.முத்தையன் உடையார், திருமதி. பன்னீர்செல்வம் அம்மாள் அவர்களுக்கு மகனாக பிறந்தார். இவரது சகோதரர் பெயர் திரு.சதீஷ்.அவர் சென்னையில் ஒரு ஹோட்டலில் மேலாளராக பணியாற்றி வருகின்றார்.

 முனைவர் திரு.இராஜேஷ் அவர்கள் தனது 4 வயதிலேயே தனது தந்தையை இழந்து விட்டார். தனது தாயார் தன்னையும் தனது சகோதரரையும் வளர்ப்பதற்கு பட்ட கஷ்டங்களை பார்த்து தனது வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இவர் 1-8 ஆம் வகுப்பு வரை பொய்யூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், 9-10 வகுப்பு வரை சிவசாமி அய்யர் உயர்நிலைப் பள்ளியிலும், 11-12 வகுப்பு வரை அழகப்பா சிமெண்ட் அரசு  மேல்நிலைப்பள்ளி, கீழப்பலூர் பயின்றார். பின்னர் ஜெயங்கொண்டத்தில் உள்ள KKC Institute யில் D.T.Ed., பயின்றார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் B.Sc.,M.Sc., பயின்றார். திண்டுக்கல் ஜெயின்னி கல்லூரியில் B.Ed பயின்றார்.

திரு. இராஜேஷ் அவர்களின் மனைவி பெயர் திருமதி.பிரியா இராஜேஷ். இத்தம்பதியருக்கு M.R.முகேஷ் கண்ணன் (7வயது),  M.R.தர்ஷிகாஸ்ரீ (4 வயது).

முனைவர் திரு ராஜேஷ் அவர்கள் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது தனது  சமூகசேவையை தொடங்கிவிட்டார். இதன் சான்றாக 08-05-1998 அன்று திருவள்ளுவர் தொண்டர்கள் என்ற அமைப்பை உருவாக்கி அதில் நிதி திரட்டி ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் தினத்தன்று போட்டிகள் நடத்தி பல பரிசுகளை வழங்கி வருகின்றனர். மேலும் அங்குள்ள கிராமங்களில் ஊர் மக்களுடன் சேர்ந்து 500 மரக்கன்றுகளை வளர்த்துள்ளார், பொது இடங்களை சுத்தம் செய்துள்ளார். தனது பட்டப்படிப்பு முடித்தவுடன் பொய்யூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். தனது கடின உழைப்பால் 100 சதவீத வெற்றியை கொடுத்தார்.தொடர்ந்து பள்ளியில் நல்ல தேர்ச்சி சதவீதம் அடைந்தது. அச்சமயத்தில் பொய்யூரில் Diamond Tuition Centre என்ற பெயரில் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தி வந்தார். பெண்கல்வி ,பழங்குடி மாணவர்களுக்கு கல்வி உதவிக்காக அங்குள்ள கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தினார். இச்சூழ்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் அரசு வேலைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்பட்டது, காரணம் அவர்களுக்கு அதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாதது.ஆகையால்

அரியலூரில் RAJESH IAS ACADEMY என்ற நிறுவனத்தை நிறுவி GROUP I, GROUP II,TNPSC, RRB, TET, UPSC, VAO,TRP, IBPS, POLICE  போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கின்றார். மேலும் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று இத்தேர்வுகளை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்துகின்றார்.முதலில் நான்கு மாணவர்களை கொண்ட ஆரம்பித்து இன்று 300க்கும் மேற்பட்ட மாணவர்களை அரசு பணியில் அமர வைத்துள்ளார். இங்கு அரியலூர் ,பெரம்பலூர், தஞ்சாவூர் போன்ற மாவட்டத்திலிருந்து மாணவர்கள் வந்து பயில்கின்றனர். தமிழகத்திலேயே முதல் முறையாக அரியலூரில் உள்ள தனியார் பள்ளியில் 946 மாணவர்களுக்கு இலவச மாதிரி IAS தேர்வு நடத்தி மிகப்பெரிய வழிகாட்டுதலை ஏற்படுத்தியுள்ளார். மேலும் குறள்நெறி வளர்ச்சி மன்றம் என்னும் அமைப்பின் செயலாளராக உள்ளார். அதில் தன்னார்வ அமைப்போடு சேர்ந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி வருகின்றனர். மேலும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு TNPSC இல் முதல்நிலைத் தேர்விற்கு 100% இலவச பயிற்சி அளிக்கப்படுகின்றது.

   மாற்றுத்திறனாளிகள், விதவைகள் போன்றவர்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்படுகிறது. என்றும் இவரது சமூக பணி தொடர பார்க்கவன் ஃபோரம் வாழ்த்துகிறது.

Contact No: +91-9095106081

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *